24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

அதாவது ஐந்தில் ஒருவர் விபத்துக்களால் காயமடைய வாய்ப்புள்ளதாக என சுகாதார அமைச்சின் ஆலோசகரும் சமூக வைத்தியர், தொற்றாத நோய் பிரிவின் டொக்டர் சமிதா சிறிதுங்க (Dr. Samitha Siritunga) தெரிவித்துள்ளார்

நாளாந்தம் சுமார் 35,000 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 35 பேர் விபத்துக்களால் மரணமடைகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆண்டுதோறும், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் ஆறு முதல் ஏழு மில்லியன் பேர் அனுமதிக்கப்படுவதாகவும் இதில் 1.3 மில்லியன் பேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.  





சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு