மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், மீரிகம இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
மீரிகம, நாக்கலாகமுவ, தம்பொக்க, குருணாகல், யக்கஹபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
நான்கு வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி, தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியில் இன்று நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..