அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் சேவை ஆகியவற்றை தனித்தனி சேவைகளாக பிரகடனப்படுத்தி கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை தமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு பங்களித்த அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
மேலும் அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் சேவையில் உள்ளவர்களின் தரத்திற்கு ஏற்ப அடிப்படை சம்பளங்கள் அதிகரிக்கப்படும் என மஹிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..