தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் இருந்து வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு Online மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.
பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வசதி எதிர்வரும் வெள்ளிக்கிழை வரை இடம்பெறும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது மக்களால் இதனை பயன்படுத்த முடியும்.
0 Comments
No Comments Here ..