அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளை கைப்பற்றி அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
0 Comments
No Comments Here ..