நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கி படையினரை கடமையில் ஈடுபடுத்த கோட்டாபயவால் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் நடைபெறுகின்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அறிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..