11,May 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை கோவிட் வரலாற்றில் மிக மோசமான காலப்பகுதி

இலங்கையில் தினசரி சரியான கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகாமையினால் நோய்த் தொற்றின் சரியான அளவு தெரியவில்லை என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும் உலகில் கோவிட் தொற்று ஆரம்பமாகியதன் பின்னர் இலங்கை வரலாற்றில் மிக கடுமையாக பரவுவது இந்த காலப்பகுதியிலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பசி பெற்றதன் முடிவாக கோவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றன. எனினும் தளர்வான சுகாதார வழிக்காட்டல் மற்றும் பொது மக்கள் சுகாதார சட்டத்திட்டங்களை கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

இதனால் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து இந்த நிலைமை மாற்றமடைய கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை கூடிய விரைவில் மேற்கொள்ளங்கள். மேலும் நிதி நெருக்கடி காரணமாக அவசியமான அளவு பரிசோதனை செய்வதற்கு போதுமான சோதனை கருவிகள் இல்லாத சூழலில், நோய் பரவுவதனை தடுப்பது கடினமான விடயமாகும்.

இவ்வாறான சூழலில் அறிவியல் ரீதியாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுவது மட்டுமே பொருத்தமானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





இலங்கை கோவிட் வரலாற்றில் மிக மோசமான காலப்பகுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு