11,May 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்ட வாகனம் - இருவர் படுகாயம்

வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு பொருட்களை ஏற்றிவந்த கன்டர் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமடைந்தனர். ஏனையவர்கள் சிறுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக பூவசரங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்ட வாகனம் - இருவர் படுகாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு