04,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


இன்று (09) மாலை 4 மணி முதல் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் ஏக்கல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தையின் துடெல்ல முதல் 20 மைல் கல் வரையான பகுதி, வஹட்டியகம, தெலத்துர, கட்டுநாயக்க, சீதுவ, உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை பகுதி, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் கட்டான தெற்கு ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.


ஜா-எல வீதியின் நீர்க்குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.




கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு