மின்வெட்டு காரணமாக மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சுமார் மூவாயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை ரத்து செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் நிர்வாகமும் வேறும் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் நாட்டின் பொருளாதார பாதிப்பினை கருத்திற் கொண்டே அதற்கு அனுமதி வழங்கவில்லை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சார உற்பத்திக்கு போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் மின்உற்பத்தி நிலையங்கள் பல செயலிழந்ததாகவும் இதனால் மின்சாரத்தை ரத்து செய்ய நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லா சந்தர்ப்பங்களிலும் மின்சாரத்தை துண்டிக்காது மாற்று வழிகளை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கே மின்சார சபை முயற்சித்து வருவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..