17,Jun 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் சடுதியாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

கடந்த சில நாட்களாக உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055 அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு சந்தை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இலங்கையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்திற்கான விலை உயர்ந்துள்ளதாக இலங்கை ஆபரண இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கொழும்பு - செட்டியார் தெருவிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 135,000 ரூபாவிற்கும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 125,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 





இலங்கையில் சடுதியாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு