22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

மீண்டும் தமிழ் பிரதேசங்களில் உருவெடுக்கும் புத்தர் கோவில்கள்.!

இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் புகாரளித்துள்ளனர் .


இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணங்களாக உள்ளன.


மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் ஆகிய இடங்களில் அவை உள்ளன. ஆனால், இங்கே பௌத்த குடும்பங்கள் ஐம்பது கூட இல்லை. பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. 


இவ்விடயம் குறித்து உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரது கவனத்துக்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.





மீண்டும் தமிழ் பிரதேசங்களில் உருவெடுக்கும் புத்தர் கோவில்கள்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு