வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை WABetainfo தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.
புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.
இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது.
பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், தொடர்பு இலக்கங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.
ரிடிசைன்டு செட்டிங்ஸ்: வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.11.16 மற்றும் 2.23.11.18 வெர்ஷன்களில் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கம் உள்ளது. இதில் மூன்று ஷாட்கட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஷோட்கட்-ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கத்தை பார்க்க முடியும்.
தற்போது இந்த பக்கத்தில் ப்ரோஃபைல் போட்டோ மற்றும் கியூஆர் கோடுகளை பார்க்க முடியும்.
மேம்பட்ட இண்டர்ஃபேசில்: ப்ரோஃபைல், பிரைவசி மற்றும் காண்டாக்ட்கள் உள்ளன. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ஸ்டார்டு மெசேஞ்சஸ் ஷாட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் செட்டிங்ஸ் பகுதியில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.
0 Comments
No Comments Here ..