குறித்த விபத்து மாலை 4.00 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் (வயது 36) தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..