அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் அச்சம் நம்பிக்கையின்மை சந்தேகம் என்பன ஏற்படலாம் நாங்கள் எங்கள் சிந்தனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க பழகவேண்டும், இந்த நிகழ்ச்சி நிரலிற்கு பலியாகக் கூடாது எனவும் கொழும்பு பேராயர் இல்ல ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட்கிருஸாந்த தெரிவித்துள்ளார்.
இது வெவ்வேறுவழிகளில் வெளிப்படலாம் உதாரணத்திற்கு ஒருவர் தனது மதத்தை தானே கடுமையாக விமர்சிப்பதன் மூலம் அதனை பின்பற்றுபவர்கள் மத்தியில் சீற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்த முயலலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொறுமை மற்றும் அதிருப்தி என்பன கைநழுவி வன்முறை எண்ணங்கள் முதன்மைபெறலாம் இவ்வாறான சூழ்நிலை தோன்றாத வகையில் நாங்கள் எங்கள் எண்ணங்களை பாதுகாக்கவேண்டும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..