யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ். நகரின் முற்றவெளி மைதானத்தில் நேற்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் யாழ். வர்த்தக கண்காட்சி இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், யாழ். இந்திய துணை தூதுவர் பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments
No Comments Here ..