நாடு முழுவதும் கடந்த 72 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகளின் மூலம் 182 கிலோ கிராம் 456 கிராம் அளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி முதல் நேற்று வரையான 72 மணிநேர காலப்பகுதியிலேயே குறித்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிக அளவாக புத்தளம் மாவட்டத்தின் பாலாவி பிரதேசத்தில் 176 கிலோ கிராம் அளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் நாட்டிற்குள் கேரள கஞ்சாவைக் கடத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுவந்த போதிலும், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அந்த முயற்சிகளை முறியடிக்க முடிந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் மாத்திரம் 3 தொன் அளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..