23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ்

தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று புதன்கிழமை (21) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினர். அதன்படி, மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதியளித்தது.


குறித்த போதகருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முன்னர் அறிவித்திருந்தார்.





போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு