19,Feb 2025 (Wed)
02:30:25 PM
  
CH
இலங்கை செய்தி

எனது பிள்ளையை ஒரு சிறிய பாடசாலையில் சேருங்கள்

எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும்.இலங்கையில் ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 


நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும், எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கும் பாடசாலையின் அதிபருக்கும் அறிவித்துள்ளார்கள். இதனால், பிள்ளையை பாடசாலையை சேர்த்துக்கொள்ள அதிபர் மறுக்கிறார் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட தாயை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துச் செல்வதாகவும், ஆனால் கையிலிருக்கும் பதாகையை எடுத்துக்ண்டு உள்ளே செல்ல முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நான் வந்தால் கையிலிருக்கும் பதாதையுடனேயே வருவேன் என தாய் திட்டவட்டமாகக் கூறுகிறார். தோளில் இருக்கும் பிள்ளையைக் கீழே இறக்குங்கள் என பொலிஸார் கேட்டுக்கொண்டதற்கும்,பிள்ளையை வயிற்றில் சுமக்க முடியும் என்றால் தோளில் சுமக்க முடியாதா? என்னைக் கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தால் பிள்ளையுடன் வாகனத்தின் மீது பாய்ந்துவிடுவேன் எனவும் அந்தத் தாய் எச்சரிக்கிறார்.





எனது பிள்ளையை ஒரு சிறிய பாடசாலையில் சேருங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு