23,Dec 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம்

சிங்களம், தமிழ், இஸ்லாமிய தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (24) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றது.


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம்', 'ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா', 'படுகொலை எங்கே நடந்தது?', 'ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம்', 'எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ' போன்ற கோஷங்களை எழுப்பினர்.


அத்தோடு 'இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள்', 'கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள்; அது குற்றம்' போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்





வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு