20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக இன்று கூடும் நாடாளுமன்றம்

விவாதத்தின் நிறைவாக வாக்கெடுப்பை நடத்துவதற்கும், நேற்று (30) இடம்பெற்ற, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில், தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று முற்பகல் 9.30 முதல் இரவு 7.30 வரையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனையை விவாதத்திற்கு உட்படுத்தி, இரவு 7.30 அளவில், வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு எதிராக வாக்களிக்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய முதலான கட்சிகள் தீர்மானித்துள்ளன

ஸ்ரீலங்கன் விமான ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை- நிமல் சிறிபால டி சில்வா

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை, விரைவில் மறுசீரமைக்கத் தவறினால், அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள், தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு, சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.


மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.





உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை தொடர்பில் விவாதிப்பதற்காக இன்று கூடும் நாடாளுமன்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு