கிளி நொச்சிமாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தரும் யூடோ பயிற்றுவிப்பாளருமான பசுபதி ஆனந்தராஜா நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை கடமை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மிக கடுமையான முறையில் தாக்கப்பட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் கிளி நொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ல் சிகிச்சை பெற்றுபெறுகிறார்.
அண்மைய நாட்களில் முகநூலில் அவர் எழுதிய அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விடயங்களின் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று அவருடைய குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். மோசமான முறையில் இரத்தம் வெளியேறி மயக்கமடைந்துள்ள நிலையில் இவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..