கடந்த மாதங்களில் பெரும்பாலான மரக்கறிகளின் விலை 100 சத வீதத்தால் அதிகரித்ததால் மரக்கறிகளின் தேவை குறைந்ததாக மொத்த வியாபாரிகள் கூறினர்.
மேலும் மரக்கறிகளின் விலை உயர்வால் பல நுகர்வோர் 100 - 250 கிராம் வரை மரக்கறிகளை வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாததால் பழுதடையும் மரக்கறிகளை தினமும் அகற்ற வேண்டியிருப்பதாகவும் சில்லறை மரக்கறி வியாபாரிகளை அதிகமானோர் கடைகளை மூடியுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சில்லறை மரக்கறி வியாபாரம் தடைப்பட்டுள்ளதால் பொருளாதார நிலையங்களுக்கு வரும் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மிகவும் வறண்ட காலநிலை, பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய நிலை காரணமாக மரக்கறி அறுவடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..