03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

நெருப்பு குழம்பை கொப்பளித்து வரும் எரிமலை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்ட் ஜோக்கின் அருகே எரிமலை ஒன்று வெடித்திருக்கிறது.

நெருப்பு குழம்பை கொப்பளித்து வரும் இந்த எரிமலை எந்த நேரத்திலும் பயங்கரமாக வெடித்துச் சிதறலாம் என அஞ்சப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தில் சுறுசுறுப்பான அல்லது கண் விழித்திருக்கும் எரிமலைகளை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்று ஐஸ்லாந்து ஆகும். இந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரெக் ஜீன்ஸ் தீபகற்பத்தில் மலை பகுதியின் மேல் உள்ள சமதள பகுதியில் பஃர்க்காதல்ஸ் ஃபயல் என்ற இந்த எரிமலை வெடித்துள்ளது.



தலைநகரில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமலை வெடித்துள்ளதால் மலை பகுதிக்கு அருகில் வாழும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் ஐஸ்லாந்தின் ரெக் ஜீன்ஸ் தீபகற்பத்தில் 4,700 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்த நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. எரிமலை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பஃர்க்காதல்ஸ் ஃபயல் என்ற எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. ஐஸ்லாந்தில் இந்த எரிமலை வெடிப்பு தொடர்ந்து 3வது ஆண்டாக ஏற்பட்டிருப்பது ஐரோப்பாவின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.





நெருப்பு குழம்பை கொப்பளித்து வரும் எரிமலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு