15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து 8 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அரசு திணறியது. இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன.

இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.


 இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.


தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 




யாழ்ப்பாணத்திலிருந்து 8 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு