05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

விளையாட்டு மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு காதல் உருவாகிய கதை

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 30 வயது பெண் சீமா ஹைதர். இவருக்கு குலம் ஹைதர் என்ற நபருடன் திருமணமான நிலையில், இந்த ஜோடிக்கு 4 குழந்தைகள் உள்ளன. பெண்ணின் கணவர் குலாம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு சீமாவுக்கும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகியுள்ளது.


இந்த விளையாட்டு மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்து காதலன் சச்சினுடன் வாழ அதிரடி முடிவெடுத்தார் சீமா. அதன்படி, கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியா வந்த சீமா கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் சச்சினுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். தன்னுடன் தனது 4 குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார் சீமா.

இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தது போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சீமா, சச்சின், சச்சினின் தந்தை நேத்ரபால் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களுக்கு பெயில் வழங்கப்பட்டது.


இந்நிலையில், சீமா ஹைதரின் கணவர் குலாம் வீடியோ பதிவு மூலம் பிரதமர் மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சவுதி அரேபியாவில் இருக்கும் அவர் தனது பதிவில் கூறியதாவது, எனது மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மோடி அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏழ்மையான மனிதன். குழந்தைகளுக்காக தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறேன். இந்திய ஊடகங்களுக்கு எனது நன்றி, எனது செய்தியை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சேருங்கள் என வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார்.



சீமாவோ, 'தனது கணவரை 2019இல் இருந்து பார்க்கவில்லை. மூன்று முறை தலாக் கொடுத்து நாங்கள் பிரிந்துவிட்டோம். மேலும் நான் பாகிஸ்தானில் உள்ள நிலத்தை ரூ.12 லட்சத்திற்கு விற்று இந்தியா வந்துள்ளேன். நான் இந்துவாக மாறி சச்சினை திருமணம் செய்து கொண்டேன். என்னை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினால் அடித்தே கொன்றுவிடுவார்கள்' என தெரிவித்துள்ளார்




விளையாட்டு மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு காதல் உருவாகிய கதை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு