09,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

மருந்து தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - தேசிய மக்கள் சக்தி

பேராதனை மருத்துவமனையில் இளம்பெண் உயிரிழந்தமைக்கு மருந்து தட்டுப்பாடே காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நளிந்த ஜெயதிச தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக கடும்பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


மருந்து தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் தரம்குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர் நோயாளர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மருத்துவமனைகள் புரொபோல் என்ற மருந்தினை பயன்படுத்துகின்றன – இந்த மருந்து கடும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியது என பல மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன எனவும் நளின்ஜெயதிச தெரிவித்துள்ளார்.



இந்தவகைமருந்து குறித்து மே 15 ம் திகதி ஹோமாஹம மருத்துவமனை அறிவித்துள்ளது ஆனால் நடவடிக்கைகள் எதனையையும் சுகாதார அமைச்சு எடுக்கவில்லை,இதேகாலப்பகுதியில் தெல்தெனிய மாத்தறை மருத்துவமனைகளும் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளன,பேராதனை மருத்துவமனையின் மயக்கமருந்து நிபுணர் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்,கொழும்பு தேசிய கண்மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்படும்வரை எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது சத்திரகிசிச்சை செய்துகொள்வது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர் அரசாங்க மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உண்மையை தெரியப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





மருந்து தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - தேசிய மக்கள் சக்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு