இலங்கை அங்கு வாழும் அனைவருக்கும் சொந்தம் அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் , பாராளுமன்றில் சரத் வீரசேகர , குருந்தூர் மலை விவாகரத்தில் நீதவானை விமர்சித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தில் பல்வேறுபட்ட சிந்தனைகளை கொள்கையுடையவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
எவர் என்ன சொன்னாலும் ஜனாதிபதி நாட்டில் ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார்.
ஐனாதிபதி 13ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார். அதற்காக தமிழ் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். விரைவில் 13ஆம் திருத்த சட்டம் , திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் எனக்கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..