பாலிவுட் நடிகை கஜோல் ட்ரையல் வெப் தொடர் முத்தக்காட்சியில் நடிக்க பல முறை ஒத்திகை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை கஜோல் பாலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
பாலிவுட்டில் மாஸ் காட்டி வந்த கஜோல், மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
ரீ என்ட்ரி கொடுத்துள்ள கஜோல், நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதில் கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, நீனா குப்தா, அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் கடைசி வரும் அத்தியாயத்தில், காமக்கொடூர கணவனால் தினமும் அவதிக்குள்ளாகும் பெண்ணாக நடித்திருந்தார்.
இதையடுத்து கஜோல் ட்ரையல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர், தி குட் வைஃப் என்ற அமெரிக்க தொடரின் ரீமேக்காகும். இதில், கணவனால் ஏமாற்றப்பட்ட ஒரு வழக்கறிஞரை சற்றி நடக்கும் கதையாகும். இந்த தொடரில் கஜோலின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த தொடரில் அலி கான், மானஸ்வி மம்காய், ஜிஷு சென்குப்தா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
சுபர்ன் வர்மா இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஒரு முத்தக்காட்சியில் கஜோல் நடித்துள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வயதில் இந்த முத்தக்காட்சி தேவையா என பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் வலம் வருகிறது. இருப்பினும் கஜோலின் நடிப்பை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், முத்தத் காட்சி நடித்தது பற்றி சக நடிகரான ஆலி அளித்துள்ள பேட்டியில், ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. முக்கியமான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருந்தனர். இந்த காட்சியை படமாக்கும் போது, கஜோலுக்கு எந்தவிதமான வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இல்லை. அவர்கள் அந்தக் காட்சியை எடுக்கும் முன் இரண்டு முறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் நடித்தார்கள் என்றார்.
0 Comments
No Comments Here ..