15,Jan 2025 (Wed)
  
CH
உலக செய்தி

எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது- ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷிய தாக்குதல் நடத்த தொடங்கியபோது, உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. தற்போது எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது.

மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. கடந்த வாரம் அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது.


அந்த வெடிகுண்டுகள் உக்ரைனை சென்றடைந்து விட்டது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. கொத்து வெடிகுண்டுகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதை வழங்கியுள்ளது.


இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறுகையில் ''எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிராக அதை பயன்படுத்தினால், நிச்சயமாக பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார். ரஷிய வீரர்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன உறுதி அளித்துள்ளது.




எங்களிடம் கொத்து வெடிகுண்டுகள் போதுமான கையிருப்பு உள்ளது- ரஷ்ய ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு