28,Apr 2024 (Sun)
  
CH
தொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் வேலையிழக்கும் அபாயம்- ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் இந்தியாவிற்கு தந்து விடுகிறது. அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் லாபம் கிடைத்து வந்தது. தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது. இதனால் இந்தியாவின் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக "கோடர்கள்" அல்லது "புரோகிராமர்கள்" தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் எமட் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:


பல்வேறு வகையான வேலைகளை வெவ்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதிக்கிறது. ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றும். ஆனால் அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாக்கம் குறைவாக இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் "லெவல் 3" வரையிலான கோடர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுவார்கள். அதே சமயம் பிரான்சில், ஒரு டெவலப்பரை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல." இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர்.


அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.




மென்பொருள் துறையில் வேலையிழக்கும் அபாயம்- ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு