டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.
இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று டெல்லி வந்த ரணில் விக்ரமசிங்கே. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது.
0 Comments
No Comments Here ..