02,Jun 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் பூரண ஹர்த்தாலுடன், போராட்டம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.


இன்று (28) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட பகுதியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணியானது, முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.

 யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன.


யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.




வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் பூரண ஹர்த்தாலுடன், போராட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு