02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது.


சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.


ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர். இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 




200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு