இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 77 ரன்கள் விளாசி அசத்தினார். இந்த ஆட்டத்தில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்து அவர் புதிய மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களைக் கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஜோஸ் பட்லர் தற்போது டி20 போட்டிகளில் மொத்தமாக 13,046 ரன்கள் சேர்த்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் உள்ள முதல் ஆறு வீரர்கள்:
கிறிஸ் கெய்ல் - 14,562 ரன்கள்
கீரோன் பொல்லார்ட் - 13,854 ரன்கள்
அலெக்ஸ் ஹேல்ஸ் - 13,814 ரன்கள்
ஷோயப் மாலிக் - 13,571 ரன்கள்
விராட் கோலி - 13,543 ரன்கள்
டேவிட் வார்னர் - 13,395 ரன்கள்
0 Comments
No Comments Here ..