02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பாவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது. இந்திய அணியில் திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடுகின்றனர்.



இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார். வெஸ்ட் இண்டீஸ் அணி: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோமன் பாவெல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.




5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு