என்னதான் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன் , மாஸ்க், என்று போட்டாலும் ஒரு நேரங்களில் வெயிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது முகம், கை பகுதி எல்லாம் கறுத்துவிடும். இதை tan என்று அழைப்பர்.இந்த கருமையை நீக்க கிரீம், மருந்து, ஆயிண்ட்மென்ட் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே இந்த கருமையை நீக்க முடியும். அதற்கான டிப்ஸ் தருகிறோம்.
அனைவர் வீட்டிலும் உள்ள எளிமையான பொருள் எலுமிச்சை. எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து காய வைத்து கழுவலாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை சருமத்தில் போடவேண்டாம். அதில் உள்ள கடுமையான சிட்ரிக் அமிலம் சருமத்தை பாதிக்கக்கூடும். இதை ஒரு நாளுக்கு நாலு முறை வீதம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேன் பொதுவாகவே மருத்துவ பண்புகளை நிறைந்தது. அதை இப்படி வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தில் போடும் போது பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் தரும். மேலும் சரும செல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கும் எரிச்சல், வறட்சி,சிவத்தல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
அழகு அமுதம் என்று செல்லப்பெயர் கொண்ட அலோவேராவின் பிரெஷான ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி காயவைத்து கவுமினால் சூரிய ஒளியால் மாறிய கறுமை சீக்கிரம் போகும் அது மட்டும் இல்லாமல் சருமம் மிருதுவாக மாறும்.
ரோபயாடிக், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர் சூரிய ஒளியாழ் பாதிக்கப்பட்ட சருமத்தை குளிர்விக்கும். சருமத்தை ஆற்றும் மற்றும் நீரேற்றம் செய்யும். அது மட்டும் இல்லாமல் செல்களுக்கு ஊட்டமளித்து உள்ளிருந்து பிரகாசிக்க வைக்கும்.
0 Comments
No Comments Here ..