02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற 'பி லவ் கண்டி' அணி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று  (05) இடம்பெற்ற 'பி லவ் கண்டி' அணிக்கும் 'ஜப்னா கிங்ஸ்' அணிக்கும் இடையிலான போட்டியில் பி லவ் கண்டி அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


பி லவ் கண்டி அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நிலையில், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்றார்.



பந்துவீச்சில் பி லவ் கண்டி அணி சார்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி லவ் கண்டி அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவு செய்தது.

பி லவ் கண்டி அணிக்காக தலைவர் வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், ஃபகார் ஜமான் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

 




லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற 'பி லவ் கண்டி' அணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு