10,Jun 2026 (Wed)
  
CH
விளையாட்டு

எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை- ஹர்திக் பாண்ட்யா

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நடந்தது. டொஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.


திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 67 ரன்கள் எடுத்தார்.


இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், எங்கள் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்தன.

நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் ஆடியிருக்கலாம். 160 அல்லது 170 ரன்கள் சிறந்த ரன்னாக இருந்திருக்கலாம். பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.




எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை- ஹர்திக் பாண்ட்யா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு