முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆரம்பித்த மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் போன்றதொரு பல்கலைக்கழகம், பேருவளை பகுதியில் செயற்படுவதாக அகில இலங்கை முஸ்லிம் நிபுணர்கள் சங்கத்தின் உப செயலாளர் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதியான மொஹமட் தாஸிம் மௌலவி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜம்மியதுல் உலமா சபையினால் நாட்டில் அரபுமொழி பாடசாலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக என அவரிடம ஆணைக்குழு வினவியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அவர், அரபுமொழி பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை என்றும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும்போது, முஸ்லிம் விவகார அமைச்சிடம் ஜம்மியதுல் உலமாக சபை அனுமதி பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இலங்கையில் எத்தனை மத்ரஸா பாடசாலைகள் உள்ள என குறித்த மௌலவியிடம் ஆணைக்குழு வினவியபோது பதிலளிததுள்ள அவர், அவ்வாறான 215 பாடாசலைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..