04,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

இன்று இடம்பெறும் இந்தியா, மலேசியா அணிகளுக்கிடையிலான ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன.


தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது.

இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. 




இன்று இடம்பெறும் இந்தியா, மலேசியா அணிகளுக்கிடையிலான ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு