ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் இத்தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக ஹசரங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி தனது 26 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய வனிந்து ஹசரங்க, 2020 முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். இறுதியாக 2021 ஏப்ரலில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான போட்டியே அவர் இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாகும்.
2017 முதல் 48 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 2019 முதல் 58 சர்வதேச இருபது20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.













0 Comments
No Comments Here ..