01,May 2024 (Wed)
  
CH
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி பரபரப்பாக இருந்தது. இறுதி பந்துவீச்சில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி  வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.

ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் 118 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.





ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு