27,Apr 2024 (Sat)
  
CH
விளையாட்டு

பரபரப்பான சுப்பர் ஓவரில் நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா!

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது பரபரப்பான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி சுப்பர ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.

இதில் இந்தியா அணி சார்பில், லோகேஷ் ராகுல் 39 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 8 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 11 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 1 ஓட்டத்தினையும், சிவம் டுபே 12 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

வொஷிங்டன் சுந்தர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், சர்துல் தாகூர் 20 ஓட்டங்களையும், யுஸ்வேந்திர சஹால் 1 ஓட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், மனீஷ் பாண்டே 50 ஓட்டங்களையும், நவ்தீப் சைனீ 11 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், இஷ் சோதி 3 விக்கெட்டுகளையும், ஹமீஸ் பென்னட் 2 விக்கெட்டுகளையும், ஸ்கொட் குகலீஜ்ன், டிம் சவுத்தீ மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 166 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் போட்டி சமநிலைப் பெற்றது.

இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், மார்டின் கப்டில் 4 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ 64 ஓட்டங்களையும், பெற்றுக்கொண்டனர்.

டொம் புரூஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், ரோஸ் டெய்லர் 24 ஓட்டங்களுடனும் டிம் செய்பர்ட் 57 ஓட்டங்களுடனும், டேர்ல் மிட்செல் 4 ஓட்டங்களுடனும், மிட்செல் சான்ட்னர் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஸ்கொட் குகலீஜ்ன் ஓட்டமெதும் பெறாத நிலையில் களத்தில் இருந்தனர்.

இந்தியா அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

வெற்றி இலக்கு சமநிலைப் பெற்றதால், வெற்றியாளரை தெரிவு செய்யவதற்கு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

பரபரப்பான சுப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

14 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை களமிறங்கிய இந்தியா அணி, ஐந்து பந்துகளில் வெற்றி இலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மவுண்ட் மவுண்ங்காய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.





பரபரப்பான சுப்பர் ஓவரில் நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு