காயம் காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) பிற்பகல் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
0 Comments
No Comments Here ..