மேற்கிந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 போட்டி அடிலெய்டில் நேற்று (12) நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மேற்கிந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது, இதனால் அவுஸ்திரேலியா 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம் (120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2 ஆவது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4 ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..