கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட பதற்றநிலையை கட்டுப்படுத்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவு அழைக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த நிலை சற்று தணிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் சிற்றூழியர்கள் குழுவொன்று அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழப்பமான சூழல் உருவானதுடன், அதனை கட்டுப்படுத்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் டெட் கொடுப்பனவை போன்று தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார சங்கங்கள் கடந்த 13ம் திகதி முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
.jpeg)
0 Comments
No Comments Here ..