02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய TOP 10 வீரர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 வது இந்திய வீரராக அஸ்வின் மாறியுள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்

  • முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுகள்
  • ஷேன் வேர்ன் (அவுஸ்திரேலியா) – 708 விக்கெட்டுகள்
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 695 விக்கெட்டுகள்
  • அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுகள்
  • ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604 விக்கெட்டுகள்
  • கிளன் மெக்ராத் (அவுஸ்திரேலியா) – 563 விக்கெட்டுகள்
  • கோர்ட்னி வால்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) – 519 விக்கெட்டுகள்
  • நாதன் லயன் (அவுஸ்திரேலியா) – 517 விக்கெட்டுகள்
  • ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 500 விக்கெட்டுகள்
  • டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) – 439 விக்கெட்டுகள்



கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய TOP 10 வீரர்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு