சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 33 பேருரிடமும் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என ஆராய்வதற்காக இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் தியத்தலாவ இராணுவ மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உடல்நிலை சீராக காணப்படுகின்றமை முதற்கட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இராணுவ மருத்துவர்களால் தற்போது மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவை ஏற்படின் இராணுவ மருத்துவர்களுக்கு மேலதிகமாக தமது அமைச்சரவையின் கீழுள்ள மருத்துவர்களை அங்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பல பிரபல விமான நிறுவனங்கள் சீனாவுக்கான தமது பயணத்தை இடைநிறுத்தியுள்ளன.
இதற்கிடையில் வூஹான் நகரிலுள்ள தமது நாட்டு பிரஜைகளில் ஒரு தொகுதியினரை இன்றைய தினம் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக 83 இங்கிலாந்து பிரஜைகள் சீனாவிலிருந்து மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..