02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

தம்மிக்க பிரசாத்துக்கு அமோக வரவேற்பு!

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஷ் தேசிய கல்லுரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்று போட்டி ஜந்தாவது முறையாக இடம்பெற்றது. இந்த சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத்திற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று (24) இரண்டாவது நாளாக இடம் பெற்ற இப்போட்டிக்கு கலந்து கொண்ட தம்மிக்க பிரசாத்தை வாகன பேரணியை தொடர்ந்து கல்லுாரி மாணவர்களின் பேண்ட் வாத்தியத்தோடு கல்லுாரியின் மைதானத்திற்கு தம்மிக்க பிரசாத் அழைத்து வரப்பட்டார். மைதானத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சென்மேரீஷ் தேசிய கல்லுாரியில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வசந்தகுமார் நிதர்ஷானவை சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கல்லுாரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லுாரியின் பிரதி அதிபர் சுந்தரேசன், உபஅதிபர் பழனியாண்டி விஜயகாந்தன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா.சிவநேசன், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







தம்மிக்க பிரசாத்துக்கு அமோக வரவேற்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு